தேயிலை தேசம்

தேசத்திற்கு
மத்தியில்
மையமிட்டு
வாழ்கிறது
எங்கள்
பரம்பரை......

எல்லைக்கோடு
நிரப்பும்
மலை
மேடுகள்...
பள்ளம் பார்த்து
இறங்கும்
ஊற்று
நதிகள்......

பனித்துளி
படர்ந்திருக்கும்
தேயிலை
இலைகள்....
அவையுடன்
சமரசம்
பேசும்
அட்டைப்பூச்சுகள்......

ஏழு மணி
பார்த்து
முழங்கும்
சங்கு.....
எறும்பின்
மகத்துவம்
மீறும்
தொழிலாளர்களின்
பங்கு.......

மார்கழி
வந்தால்
குளிருக்கு
சந்தோஷம்.....
பஜனை
ஊர்வலத்தில்
ராமருக்கு
கொண்டாட்டம்.......

விடுமுறை
தினங்களில்
ஊர் சுற்றும்
இளசுகள்.....
வீடு
வந்ததும்
திட்டித்தீர்க்கும்
பெருசுகள்.....

வீட்டுக்கொரு
கூடு
கோழி வளர்ப்புக்கு......
ஆளுக்கொரு
பட்டி
மாடு வளர்ப்புக்கு.....

நாலாபுறத்திலும்
நாலின
கோபுரங்கள்....
பேதம்
வெறுக்கும்
நற்பணி
மன்றங்கள்......

கொஞ்சிக்குளவும்
மலை நாட்டு
வனப்பு....
தோற்றுப்போகும்
வெளிநாட்டு
சிறப்பு......

எழுதியவர் : ம.கலையரசி (12-Nov-14, 9:19 am)
Tanglish : theyilai dhesam
பார்வை : 135

மேலே