ப்ளீஸ்
ப்ளீஸ்
======
வைகறை விழுங்கிய மலைக் குன்றுகளைபோலே
தீண்டாத குவியல்களினோடெல்லாம்
குளறுகிறேன்
ஆம் ம்ம்ம்ம் இதுதான் எனக்கான நேரம்
துலக்கச்சொல்லும்
தனிமையின் வேனலில்
வந்ததும் காணாமல் சென்றுவிடுகிறாய் வசந்தமே
இன்னும் தா
எத்தனை ஏமாற்றங்களை தந்து சென்றாலும்
தாங்கிக்கொள்கிறேன்
காணாதிருக்கும் போதுதான்
மறக்க ஏதுவாக இருக்கிறதுபோல் உனக்கென்னை
பிரிகையில் இடர்முட்டித் தளரும்
பேசா உதிர் இதழ்களும்
இமையுடையா நிற்கும் நீர்ப்பனித்துளிகளும்
இன்று வழிக்கடவுகளாகி
வார்த்தைகளோடு
பிரியாகையில் ஒழுகிப் போகிறது
இளவேனிலின்
அழகான பூவெல்லாம் ,,
அலர்ந்து மலர்ந்து முகிழும் அக்காலம் வரையும் ,,
எங்கிருந்தோ பார்த்தப்படி ,,
இரசித்துக்கொண்டே இருப்பேன்,,
அதன் காலங்கள் முடிந்துதிரும் அத்தாழமொன்றில் ,,
அவைகளை
காற்றுகொண்டு போகாமல்
என் எழுதா பக்கங்களில் சேமித்து ,,
யாருக்குமறியா கவிதைகளை
வாசம் குறையாமல்
பிரசவித்துக் கொண்டே இருப்பேன் ம்ம்ம்,,
அவ்வப்பொழுது
காகிதம்போல் வாடி உணங்கிய
அக்கருத்த இதழ்களை
மயில் பீலியால் வருடிய வண்ணம் ம்ம்ம்ம்,,
விடைசொல்லிப்போகும் காலம்வந்துவிட்டால்
அந்நாட்குறிப்பு புத்தகத்தினூடேயே ,,
புதைந்துவிடுகிறேனே ப்ளீஸ் ம்ம்ம்
அனுசரன்