என் காதல்
சராசரி
காதலனாய்
உன்னை
சந்திக்க
விருப்பமில்லை
பொருந்தாக்
காதலாயினும்
இது
பொழுபோக்கு
காதலில்லை
உன்னை
முத்தமிட
ஆசைதான்
உன் கிளிவிரல்
கிள்ளையில்
சத்தமிட
ஆசைதான்
ஓடியாட
ஆசைதான்
உன்னில்
ஓய்ந்துவிட
ஆசைதான்
கொட்டிவிடும்
குப்பையாய்
வெட்டியாய்
இருக்கிறேன்
வீட்டுக்குள்ளே
சகோதரர்
எல்லாம்
சம்பாதிக்க
தவிக்குமெனக்கு
தகப்பனார்
வைத்தபெயர்
தண்டச்சோறு
தகுதியறிந்து
காதல்
வருவதில்லை
தகுதியறிந்து
வருவது
காதலில்லை
கையலாகாத
இளைஞனாய்
நானிருக்க
எப்படியுன்னை
காதல்செய்து
கரம்பிடிக்க
ஸ்கூட்டியில்
போகுமுன்னை
என்
அரசாங்க
சைக்கிளில்
வைத்து
அழுத்தி போகவா
குளிர் அறையில்
உறங்கும்
உனக்கு
என்
குடிசைவீடு
ஒத்துவருமா
கலர்கலர்
ஆடைகள்
உனக்கு
காலர்கிழிந்த
சட்டைகள்
எனக்கு
உன் வீட்டின்
கைகழுவும்
தொட்டியளவுதான்
எங்கள்
கழிப்பறையை
உன் வீட்டு
குளியலறை
அளவுதான்
எங்கள்
குடித்தனமே
நீயோ
அச்சில்வார்த்த
அழகுநிலா
நானோ
அழுக்குப்படிந்த
அமாவாசை நிலா
நீ வாசனையுள்ள
வண்ணச்செடி
நான்
கவனிப்பாரில்லாத
கள்ளிச்செடி
அடைந்துவிட
ஆசையுண்டு
ஆஸ்காரை
கால்பிடித்திழுக்கும்
காலேஜ்
அரியர்ஸ்
நான்
மட்டுமல்ல
நிறைய உண்டு
நாட்டினில்
இறக்கமுடியாமலும்
இறக்க முடியாமலும்
பொருந்தாக்
காதலாயினும்
இது
பொழுபோக்கு
காதலில்லை
ஞா.தியாகராஜன்,
இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு,
தியாகராசர் கல்லூரி,
139-140,காமராஜர் சாலை,
தெப்பக்குளம்,
மதுரை-625009.