கல் நெஞ்சக்காரி நான்

என்னவனே ....
இதுவரை என் நினைவு ..
உனக்கு வரவில்லையோ ..?
பிரிந்து சென்று இத்தனை ..
நாட்கள் என் நினைவு ...
வரவில்லையோ ...?

உன் பதில் வராமல் ...
துடிக்கும் என் மனம்போல் ...
உலகில் எந்த கொடிய செயல் ...
இருக்கபோகிறது ...?
உயிரோடு இருக்கும்...
கல் நெஞ்சக்காரி நான் ...!!!

திருக்குறள் : 1198
+
தனிப்படர்மிகுதி
+
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 118

எழுதியவர் : கே இனியவன் (13-Nov-14, 10:14 am)
பார்வை : 167

மேலே