கடிஜோக்ஸ்
"உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்"
"சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க,
பொறையா, பிஸ்கட்டா?"
------------------------------------------------
இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து....
"யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..
" "ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"
------------------------------------------------
"உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார்.."
"சீ.. சீ.. அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.."
--------------------------------------------------
"ஏம்பா திடீர்னு ரேடியோல சவுண்டை கம்மி பண்ணிட்டே?
" "சவுண்டை கம்மி பண்ணலைங்க.. நான் தான் முடிவெட்டும்போது தெரியாம உங்க காதை கட் பண்ணிட்டேன்!"
-----------------------------------------------
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஒரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்......!
---------------------------------------------
நோயாளி: டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க
-------------------------------------------
"டாக்டர்.. என் கணவருக்கு இப்போ எப்படி இருக்கு?
" "அவர் கவர்மெண்ட் ஆஃபீஸரா?" "ஆமாம்
" "அப்போ சந்தோஷமான விஷயம்தான்
கவர்மெண்ட்ல இருந்து நிறைய பணம் உங்களுக்கு வரப்போகுது."
------------------------------------------