மழை விடுப்பு

மழைக்கால மந்தகாசம்
மனம் மயக்கும் மண் வாசம்

மேகமூட்ட பகல் இருட்டு
மேனி குளிர் கதகதப்பு

நனைந்த உடல் நடுநடுங்க
நெருப்பு அனல் இதம் கூட்டும்

அன்பு மனை அரவணைப்பில்
அசந்துறங்க ஆசை வரும்
அலுவல்கள் விடுப்பெடுக்கும்!

எழுதியவர் : கானல் நீர் (13-Nov-14, 6:46 pm)
Tanglish : mazhai viduppu
பார்வை : 92

மேலே