தாய்

பூமி ஓவியப் பந்தில்
தீட்டி வைத்த முதல்
உயிர் வண்ணம் தாய்
ஐம்புலன் அறியாத உயிருக்கு
உலகறிய உடல் தந்தாய்
கரு வீட்டில் சிலகாலம்
தலை கீழாய்
தவம் இருந்தோம்
உனக்கு மகன் ஆகாவென்று
தோற்று தோற்று
இருந்த எனை தேற்றினாய்
பின்பு தனிமையில்
நீ இருந்து தேம்பினாய்
எனக்காய்
எமக்கு துன்பம் வரும் போது
அதன் விம்பமாய்
நீ உடல் மெலிந்தாய்
மண்நோக்கி விழுந்த எம்மை
விண்ணாக உயர வைத்தாய்
பருவங்கள் உருவங்கள்
பலமாறிலும்
பூகோள திசைபோல்
என்றும் மாறா அன்பு
உன்னிடத்தில்
எமக்காய்
******லெனின் *****