உழைப்பாளி
எப்போதும் நாங்கள் தயார்
எதற்கும் நாங்கள் தயார்
உழைப்போம் உழைப்போம்
அயராது உழைப்போம்
தூசி தட்டுவது முதல்
தூர்வாருவது வரை
மணக்கும் பூந்தோட்டம் அமைப்பது முதல்
துர்நாற்றம் அகற்றுவது வரை
சாய்ந்து போகும் எந்திரங்கள்
மாய்ந்து போகாத மந்திரம் செய்வோம்
உழைப்போம் உழைப்போம்
அயராது உழைப்போம்
இரவு பகல் பார்ப்பதில்லை எங்கள் விழிகள்
வெயில் மழை உணர்வதில்லை எங்கள் தேகங்கள்
சலித்து களைத்ததில்லை
ஓய்ந்து உட்கார்ந்ததில்லை
எசீயை என்றும் நாடியதில்லை
தூசியை கண்டு ஓடியதுமில்லை
உணவை கூட மறந்ததுண்டு, ஆனால்
உழைக்க மறந்ததில்லை
எங்கள் குருதியும் சிந்துவதுண்டு
இருந்தும் உறுதியாய் உழைத்தோம்
காயங்கள் பல கண்டதுண்டு, இருந்தும் உழைப்பால்
மாயங்கள் பல நிகழ்த்தினோம்
நிற்காமல் ஓடுவது கடிகாரமுள் மட்டுமல்ல
எங்கள் கால்களும் தான்
உண்மையாய் உழைத்தோம்
உறுதியாய் உழைத்தோம்
எப்போதும் நாங்கள் தயார்
எதற்கும் நாங்கள் தயார்