முதியோர்

முத்தான பிள்ளைகள் பெற்றோர் இன்று முதியோராக
வீட்டின் ஒரு மூலையில் முணு முணுக்கின்றனர்
யாரும் சொன்று பார்ப்பது குறைவு

அன்று இவர்கள் வாழ்வு எப்படி இருந்தது நீனைத்துப் பார்ப்போம் பாடுபட்டு உழைத்தவர்கள் யாரும் பாராமல் இருப்பதேன்

உடம்பெல்லாம் சுருங்கிவிட்டதென்று
உதறித்தள்ளாதே
இவர்க்கு நல் இதயமுண்டு மறவாதே
இவர்கள் அனுபவத்தின் ஆசான்கள்

நம் எதிர்காலம் சிறக்க தம் நிகழ்காலத்தை தொலைத்தவர்கள்
கருவறையிலும் கண்கலங்காமல் பார்த்தவர்கள்

முதியோர் இல்லங்கள் எதற்கு மனித நேயம் கொண்ட நாம் நம்மை மனிதராக்கியோரை மறக்கலாமா

நாளை குருத்தோலையும் சருகாகும்
சரித்திரங்கள் தலைகுனியும்
பூக்களில் வாசம் இல்லாது போகும்
முதியோரின் உள்ளம் காயப்பட்டால் இவையெல்லாம் நடக்கும்.

எழுதியவர் : தேகதாஸ் (14-Nov-14, 8:06 am)
Tanglish : muthiyor
பார்வை : 360

மேலே