அவளாட்சி

ஆசையாய் கூட்டி வந்து
அலங்கரித்தோம் கூடத்தில்
நேசமிக கூடவே அவள்மேல்
பாசமிக பொழியவே - நாளடைவில்
வேசம் கலைந்தது முப்
பொழுதும் சூழ்ச்சி சண்டை
விரோதம் சாபம் உடன்
க்ரோதம் வில்லங்க விபரிதம்
மேலும் நாளும் கிழமையும்
நல்லன போய் இழிவாய்
வேளை கெட்ட வேளையில்
ஓலம் ஒப்பாரி கேட்கும்

கட்டுக் கடங்கிய குடும்பம்
கட்டு பிரிய அவரவர்
விட்டுக் கொடுக்காமல் வீண்
விரோதம் பரவ முடிவில்
கூட்டி வந்தார் இளயவளை
கட்டிலறை அலங்கரிக்க - இப்பொழுது
ஆளுக்கு ஓர் அறையில்
அவர் விரும்பும் காட்சியுடன்
நாளும் முகம் பார்க்கும்
நேரம் தான் எப்பொழுது........

பிரித்தாளும் சூழ்ச்சியில் வென்றதில்
சிரித்தாளு கின்றாள் நீள்தொடரில்

எழுதியவர் : முரளி (14-Nov-14, 11:14 am)
பார்வை : 134

மேலே