குழந்தையாக வேண்டும்
தத்தி தவழும் கால்கள் வேண்டும்
சின்ன சின்ன கன்னங்கள் வேண்டும்
அதை பார்பவரெல்லாம் அள்ளி கிள்ளிட வேண்டும்.
எதிர்பாராத சில முத்தங்கள் வேண்டும்.
கவலை அறியா புன்னகை என் உதடுகளில் என்றும் தவழ்ந்திட வேண்டும்.
சின்ன தேவைக்கெல்லாம் தாயின் முன்
தரையில் புரண்டு அழுதிட வேண்டும்.
தங்கையின் தலைமயரை வேண்டுமென்று கலய்த்து விட்டு கட்டி புரண்டு சண்டையிட வேண்டும்.
வீட்டுப்பாடம் செய்யாமல் வகுப்பறை வெளியே முட்டியிட வேண்டும்.
அப்பொழுதும் தோழர்களுடன் தும்பி கதை பேச வேண்டும்.
திருவிழா கூட்டத்தில் தொலைந்து கிடைத்திட வேண்டும்.
வேண்டும்போதெல்லாம் அன்னையை கட்டி முத்தமிட வேண்டும்
ஒன்றுமில்லாமல் அவள் மடியில் அழுது கிடக்க வேண்டும்
பாசத்தை வெளிக்காட்டாத தந்தையிடம் திருட்டு படவா திட்டுகள் வேண்டும்
பாட்டி கதை சொல்ல ம்ம்ம் கொட்டி தூங்கிட வேண்டும்
கிழிந்த ஆடைகளிலும் கிழியாத மகிழ்ச்சி வேண்டும்.
சித்தி வாங்கி வரும் தின்பண்டங்கள் வேண்டும்,
அதை சிந்தாமல் திங்கச்சொல்லும் அத்தை வேண்டும்.
நான் தூங்கியதாக நினைத்து மெல்லமாய் என் நெற்றியில் கை வைக்கும் பெற்றோரின் அன்பு இரவுகள் வேண்டும்.
இவையெல்லாம் கிடைக்க நிலைக்க
மிண்டும் நான் குழந்தையாகும் வாய்ப்பு வேண்டும்.
இனிய குழந்தைகள் நாள் நல்வாழ்த்துக்கள்.!!!