அன்பென்னும் மழை -5 -தேவி

(முன் கதை : லேட்டாக வந்த வர்ஷிதாவை நியூ எம்டி வருண் திட்டிகொண்டிருந்தான்)

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தவள் வருண் பேசி முடித்து நிமிர்ந்ததும், அலங்காரம் செய்வதும், அழகு நிலையம் போவதும் என் தனிப்பட்ட விருப்பம். அதை பற்றி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

மேலும் என் வேலையில் தவறு இருந்தால் மட்டும் என்னிடம் சொல்லுங்கள்.
என்ன சொன்னீர்கள் , உங்களை மயக்க வந்தேன் என்றா?

உங்களை மயக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை சார். ஏன் லேட்டு என்பதற்க்கான காரணத்தையும் அதற்கான அனுமதியும் வாங்கிய பின் தான் இன்று நான் தாமதமாக வந்தேன்.

உங்களுக்கு சந்தேகம் என்றால் எனது வருகை பதிவேட்டை பார்த்துகொள்ளுங்கள் சார். இப்பொழுது எதற்காக அழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா சார்? என்று படபடவென்று பேசி முடித்தால் வர்ஷிதா.

அதோடு பேச்சை நிறுத்தியவனாக சரி சரி , ஹெட் ஆபிசுக்கு அனுப்ப வேண்டிய ரிபோடை உடனே அனுப்பி விடு. பானு இன்னைக்கு லீவு . அவங்க வொர்கயும் பார்த்திடு என்று கூறிவிட்டு, கணேசனை இண்டர்காமில் அழைத்து உடே கேபினுக்கு வர சொன்னான்.

தன் கேபினுக்கு வந்தவள் அப்போது தான் கவனித்தாள், தன்னோடு பணிபுரியும் ஷீலாவையும், நிவேதவையும்.

ஷீலா , அடர் பச்சை நிறத்தில் ஸ்லீவலஸ் சுடிதாரில் , சிவப்பு நிற லிப்ஷ்டிகில் மோகினி தோற்றுவிடும்படி வந்திருந்தாள்.

நிவேதாவோ சேலை கட்டி இருக்கிறாளோ இல்லையோ என்று சந்தேகப்படும்படி மிகவும் லேசான உடல் தெரியும் சேலையில் , இருக்கும் அணிகலன்களை அள்ளி பூட்டிக்கொண்டு வந்திருந்தாள்.

வர்ஷிதா வந்ததே தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

என்னடி ஷீலா, என்ன போஸ் கொடுத்தாலும் பாஸ் மடங்க மாட்டார்போல தெரியுதேடி.

ஆமாண்டி, லாஸ்ட் மோனத் சாள்ஸ் ரிப்போர்ட் எடுத்து வரும்படி சொன்னார். போய் எதிரில் நின்றிருந்தேன். உங்கள் பேர் நிவேதாவா, உங்கள் துப்பட்டாவை சரியாக போட்டால் இந்த உடை பார்பதற்கு நாகரிகமாக இருக்கும் என்று கூறி அனுப்பிவிட்டார்டி .

சரியான சாமியார்டி இந்த வருண். ஆள் அம்சமா இருந்து என்ன பிரயோசனம். கொஞ்சம் கூட அழகை ரசிக்க தெரியாத ஜடம்டி என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.

ஓஹோ , இவர்கள் போட்ட சீனில் தான் மனுஷன் இப்படி காஞ்சாரா? அதுக்காக யாரிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியாதா? அதுவும் இந்த வர்ஷிதாவை என்ன நிசிட்டார். ஆளை மயக்குபவள் என்றா.?
ச்சே முன்னே பின்னே தெரியாத பெண்ணை பற்றி பார்த்த முதல் சந்திப்பிலேயே இப்படி பேச என்ன தைரியம்.

கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள். இந்த பானு ஒரு போன் கூட பண்ணி சொல்லலியே லீவுன்னு. அவளுக்கு கால் பண்ணி கேட்க , உடம்பு சரியில்லை என்றால் பானு.

அதையும் இதையும் யோசித்து வேலையில லேட் பண்ணினா அதுக்கும் சேத்து வெச்சு திட்ட போறார் என்று நினைத்தபடியே வேலையில் மூழ்கினாள்.

இண்டர்காம் ஒலித்தது. எடுத்தாள் வர்ஷிதா. லாஸ்ட் மந்த் பர்சேஸ் , சேல்ஸ் , ஸ்டாக் பைல்ஸ் எடுத்திட்டு என் கேபினுக்கு வாங்க என்றான் .

பைல்களோடு நுழைந்தாள் வர்ஷிதா. பைல்களை பார்த்து தனக்கு தேவையான குறிப்புகளை குறித்து கொண்டான்.

அப்பொழுது பார்த்து தானா ஷீலாவும் நிவேதாவும் பேசியது அவளுக்கு ஞாபகம் வரவேண்டும். ஆள் அம்சமா இருக்கார் என்று பேசியது.

வருணை நன்றாக அப்பொழுதுதான் கவனித்தாள். ஆண்மைக்கே உரிய கம்பீரமான தோற்றம். படிய வாரிய கேசம். திரண்டிருந்த தோள்கள் , கருத்தடர்ந்த மீசை. சிரித்தால் இன்னும் அழகாயிருக்குமே என்று தோன்ற வைத்த இதழ்கள்.

பைலை பார்த்து நிமிர்ந்தவன், எத்தனை மார்க் என்றான்.

என்ன என்றாள் திகைத்து. வந்ததிலிருந்து உற்று பார்த்தியே எத்தனை மார்க் வாங்கியிருகேன்னு தெரிஞ்சுக்கலாமா நான் என்றான்.

ஐயோ இவனிடம் வசமாக மாடிகொண்டோமே. ச்சே என்ன இது கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் இவனை இவ்வளவு நேரம் பார்த்திருக்கோமே . இதையும் இவன் பார்த்து விட்டானே.
சும்மாவே ஆளை மயக்க வந்தியானு கேட்டவன்.
மெல்ல அவல் வேறு கிடைத்து விட்டது சும்மா விடுவானா என்று விழித்தாள்.

எவ்வளவு மார்க் என்று கேட்டேன் பதிலை காணோம். பாஸ் மார்க் கூட இல்லையா என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்டான்.

என்ன சொல்வது என்று தெரியாமல் , சாரி சார் என்று கூறிவிட்டு பைலை தூக்கி கொண்டு வேகமா வெளியே வந்தாள்.

அவன் பார்க்காத பெண்களா? அவன் அழகுக்கும் பணத்திற்கும் ஆசைபட்டே அவன் மீது தானை வந்து விழும் பெண்களே அதிகம்.

இவள் வித்தியாசமாய் தெரிகிறாளே. அழகும் அறிவும் ஒரே இடத்தில குடியிருப்பது அபூர்வம் என்று அம்மா சொல்வார்களே. அந்த இரண்டுமே இவளிடம் வஞ்சனை இல்லாமல் ஒருங்கே இருக்கிறதே .

ஒருவேளை இவள்தான் நான் தேடிய தேவதையா? எப்படா எனக்கு ஒரு மருமகளை கூட்டிவரபோறேன்னு கேக்கிற அம்மாவுக்கு, அம்மா இதோ உன் மருமகள் என்று இவளை தான் கூட்டி போய் நிறுத்தவேண்டும் போல் தோன்றியது.

என்ன ஒரு மிடுக்கான பேச்சு. கர்வம் கூட ஒரு அழகுதான்.
வர்ஷிதாவை பற்றி யோசித்த கொண்டிருந்தவனின் அலைபேசி ஒலித்தது. திரையில் நிகிதா என்று ஒளிர்ந்தது.


(தொடரும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (14-Nov-14, 5:24 pm)
பார்வை : 200

மேலே