நான் மறவா நிமிடம்

நான் மறவா நிமிடம்

அந்தி மாலை நேரம் ....

சூரியன் மறைய ...
நிலா தன்அழகில் அனைவரின் மனதையும்
திருட புறப்படும் நேரமது....

அலுவலக நேரம் முடிந்து அனைவரும் புறப்பட்டோம் ....பேருந்தை பிடிக்க அவசர அவரசமாக அனைவரும் நடையை வேகப்படுத்தினோம்....

ஒரு சிலர் தன்னால் முடிந்த உதவியை
அந்த திறமையான மனிதற்கு சில்லறை காசுகளாக போட்டுவிட்டு சென்றனர் ...

எங்கள் வேகம் சற்று குறைந்தது ...

அந்த நிமிடம் அந்த திறமைசாலி
வரைந்த ஓவியம் மனதில் ஆழமாக பதிந்த
சிவனின் அழகு ஓவியம்.....

ஆண் பாதி பெண் பாதி ....அழகான சிவனின் உருவம்..


அழகான கோலமாவில் வரைந்து
பலவண்ணக்களில் மேலும் அழகு சேர்த்தார் .
அதன் அழகு அனைவரின் கண்களையும் கவர்ந்து மெய்மறக்க செய்தது ....

ரசித்துகொண்டே அவரை பார்த்தேன்....
கைகள் இரண்டும் இல்லை ...
ஆபத்தில் கைகளை இழந்துவிட்டார் போலும்....

ஒருநிமிடம் மனம் கனமானது....
கண்களில் கண்ணீரும் கசிந்தது....

அன்று எனக்கு பிறந்தநாள் ....

என்னிடம் இருந்த பத்து ரூபாய் நோட்டை
அவர் திறமைக்கு தந்தேன் . என்னால் முடிந்த உதவி அந்த திறமைசாலிக்கு அப்போது அது மட்டுமே...

வரைந்துகொண்டிருந்த அவர் என்னை பார்த்து
ஒரு சின்ன புன்னைகை பூத்தார் ...

எனக்கு மனம் லேசானது ...

எனக்கு வாழ்த்து சொன்னதுபோல் என் மனம்
உணர்ந்தது....சொல்லமுடியா ஆனந்தம் அந்த நிமிடம் என்னில்....

சிந்தித்தேன்.....கடவுளின் படைப்பு சிந்திக்கவேண்டியது
திறமை உள்ளவர்களுக்கு இந்த சமுதாயத்தில் தூசாக மதிக்கபடுகின்றனர்.....

அவரின் உடல் குறைபாட்டை அதற்கான
சொல்லில் கூற விருப்பவில்லை ....
அவரின் திறமைக்கு அந்த குறை எனக்கு பெரிதாக தெரியவில்லை ....

என் வாழ்வில் நான் மறக்கமுடியாத
என் உதய நாள் இந்த வருடமே....

சமுதாயமே நம்மால் முடிந்த உதவி
செய்யலாமே....அரசாங்கம் ஏதேனும் முயற்சி செய்யுமா....எழுத்தில் நாம் முயற்சிப்போமா நட்புகளே.....

உண்மை சந்தோசம் என்பது இயலாதவர்க்கு
நம்மால் முடிந்த உதவி செய்வதில் உள்ளது .
மனம் காணும் உண்மை சந்தோசம் இதுமட்டுமே....

(தவறாக ஏதும் இருந்தால் மனிக்கவும் அன்பர்களே....நாம் நினைத்தால் முடியாது என்பது ஏதுமில்லை ,இதில் சொல்லிவிட்டு மேலும் ஏதும் இயலாதவர்களுக்கு உதவி செய்ய முற்சித்தால் மிகவும் நல்லது)

எழுதியவர் : சகிமுதல்பூ (14-Nov-14, 6:02 pm)
பார்வை : 194

புதிய படைப்புகள்

மேலே