உன் மௌனத்தை நீயே கொல்ல

வரிகளில் உருவம் தந்து
என் மனதில் பதிந்தவளே
என் உதிரம் உருக்கித்தான்
காதல் செய்கின்றேன்

இரத்தம் பாலாகும்
இயல்பாய் தாய்க்கு
சப்தம் இல்லாமல்
என் காதல் அரங்கேறும்

உன் மௌனமாய் உருமாறி
உன் மனதை வசியம்வைத்து
வார்த்தையை வரவழைக்க
நான் செய்யும் ஒரு மாயம்

உன் சம்மதம் நான் கேட்டால்
எப்போதும் மௌனம் கொள்வாய்
இப்போது மௌனம் கொண்டால்
காதல் சம்மதம் என எரப்பேன்

எப்படி மௌனம் கொள்வாய்
உன் மௌனத்தை நீயே கொல்வாய்

எழுதியவர் : ருத்ரன் (14-Nov-14, 7:20 pm)
பார்வை : 119

மேலே