முற்றுப் புள்ளி

கடலின் முற்றுப் புள்ளி கரை
அலையின் முற்றுப் புள்ளி ஆழம் !!!

நிழலின் முற்றுப் புள்ளி இருட்டு
நிஜத்தின் முற்றுப் புள்ளி வேடம் !!!

இரவின் முற்றுப் புள்ளி விடியல்
விடியலின் முற்றுப் புள்ளி இரவு !!!

துன்பத்தின் முற்றுப் புள்ளி இன்பம்
இன்பத்தின் முற்றுப் புள்ளி துன்பம் !!!

நிலவின் முற்றுபுள்ளி அமாவாசை
பௌர்ணமியின் முற்றுப்புள்ளி தேய்பிறை !!!

காத்திருப்புகளின் முற்றுப்புள்ளி வருகை
தேடலின் முற்றுப்புள்ளி வசப்படல் !!!

ஆரோக்கியத்தின் முற்றுப்புள்ளி நோய்
நோய்களின் முற்றுப்புள்ளி சுகம் !!!

வெற்றிடத்தின் முற்றுப்புள்ளி புயல்
புயலின் முற்றுப்புள்ளி அமைதி !!!

நேர்மையின் முற்றுப்புள்ளி சுயநலம்
உறவுகளின் முற்றுப்புள்ளி பகை !!!

கருவின் முற்றுப்புள்ளி ஜனனம்
உருவின் முற்றுப் புள்ளி மரணம் !!!

வாழ்வின் முற்றுப்புள்ளி மரணம்
மரணத்தின் முற்றுப்புள்ளி பிறவி !!!

‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡

விடியலின் புள்ளிகள் நோக்கி
பயணிக்கும் வாழ்க்கை சொர்க்கம்
நேர்மறை எண்ணங்கள் யாவும்
உடைத்திடும் தடைகள் எவையும்
வெற்றிகள் காற் புள்ளி காணும்
தடை முற்று தோல்வியை தழுவும் !!!

‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡

எழுதியவர் : சொ.சாந்தி (15-Nov-14, 3:04 pm)
Tanglish : murrup pulli
பார்வை : 360

மேலே