காதலின் பயணப்பாடு
காதல் உயிர்விட்டு உடல்விட்டு மட்டும் பயணப்படவில்லை
நம்முள் பல கட்டங்களாகப் பயணிக்கிறது
பிறந்தவுடன் தாய்ப்பாலின் மீதுக் காதல்!
மழலையராய் மலரும்பொழுது நம்மை அரவணைத்த
தந்தையின் மீதுக் காதல்!
பள்ளிப் படிப்பின் பொழுது உணவுப்பங்கிட்ட
நண்பர்கள் மீதுக் காதல்!
கல்லூரி நாட்களின் பொழுது நாம்ச்செய்த
குறும்புச்செயல்களின் மீதுக் காதல்!
மணவாழ்வில் துணைவியின் மீதுக் காதல்!
என்ன ஒரு அதிசயம்
வாழ்வின் மீதுக் கொள்ளும் காதலே
செல்ககளை ஆண்டுகளுக்கு
உயிர் கொள்ளச்செய்கிறது......!!
மரணத்தின் மீதுக் கொள்ளும் காதலே
செல்லை நொடியில் சொர்க்கம் சேர்க்கிறது.....!!