மாசில்லா உலகு

அடிமைத் தனத்தை முடக்கி
சுதந்திரப் பறவையாய் பறப்போம் வாரீர்..!
அயல் மொழியைக் களைந்து
தாய் மொழியில் கல்வி பயில்வோம் வாரீர்..!
அனைத்து மக்களையும்
உறவினராய் நினைத்து உறவாடுவோம் வாரீர்..!

சாதி மத வேறுபாடுகளை உடைத்து
சண்டைகளில்லா சமுதாயத்தைப் படைப்போம் வாரீர்..!
சிந்தித்து வாழ்ந்து
நாட்டை சிகரத்தின் அளவிற்கு உயர்த்துவோம் வாரீர்..!
பாலிதீனை ஒழித்து
இந்தப் பரந்த உலகைக் காப்போம் வாரீர்..!

வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவோம் வாரீர்..!
மனிதருள் இருக்கும் அழுக்காறுகளை
அகற்றி அளவளாவுவோம் வாரீர்..!
மாசில்ல உலகைப் படைக்க
மனித மாணிக்கங்களே வாரீர்..!வாரீர்...!

வீதிகள் தோறும் விளக்குகள் ஏற்றி
வீடுகள் தோறும் தோரணங்கள் கட்டி
எதிர்கால மாசில்லா உலகைக் கொண்டடுவோம்.

ச.வெங்கடேசன்(14-PB-053),லயோலா கல்லூரி,ஸ்டெர்லிங் சாலை,நுங்கம்பாக்கம்,சென்னை-600 034

எழுதியவர் : ச.வெங்கடேசன் (16-Nov-14, 7:10 pm)
பார்வை : 98

மேலே