தோற்றினும் முயற்சிசெய்
நாம் உலகை காண,
வெளிவரும் வேளையில்
வலியை வயிற்றோடும்
வாயோடும் வைத்து இருந்தவளின்
வலியை விடவா
தோற்கும் வலி பெரிது?
இல்லை! நிச்சயமில்லை!
அத்தகையவலுக்கு பிறந்த
நாம் ஏன்?
தோல்விக்கு வருந்த வேண்டும்!
தோல்வியை அல்லவா
வருத்த வேண்டும்!
தோல்வி உன்னை முத்தமிடும் பொது,
சத்தமிட்டு சொல்,
"தோல்வியே உன்னை தோற்கடிப்பேன் என்று !"
இலட்சியத்தை அடைய
எத்தனைமுறை
நீ தோல்வி அடைகிறாயோ
அத்தனைமுறையும் எழும்சக்தி
உனக்குள் உதயமாகும்
உத்தரவாதம் தருகிறேன்
தோல்வியடைந்து எழுந்தவளாக!
உனக்குள் இலட்சியம்
கொழுந்துவிட்டு எரியும் வேளையில்,
தோல்வி என்ன தோல்வி!
பொசுங்கிவிடும் பாரு!
தோல்வி உன்னை தூற்ற வந்தாலும்
உன் முயற்சியினால்
அதனை தோற்றுபோக செய்துவிடு!
எழுந்து வா!
தோல் கொடுக்க துணையாக
என்போன்ற பல பேர்!