கானகத்தில் காதலன்-கயல்விழி

காரிருள் நிறைந்த
கானகத்தில்
காத்திருந்தேன்
என் காதலிக்காக...!!

முழி பிதுக்கும் ஆந்தைகள்
முதுகிற்கு பின் ஊளையிடும்
நரிகள்
தூரத்தே காதரும் கோட்டான்கள்
எதற்கும் அஞ்சவில்லை

விரக்த்தியின் பிடியில்
வேதனையில் மடியில் நான்
எப்படி அஞ்சுவேன் அற்ப பதர்களுக்கு ..

அன்று
விலங்குகளை வேட்டையாட
சென்ற என்னை
வேட்டையாடி எடுத்துச்சென்றால்
காட்டுவாசி பெண்ணொருத்தி

பெண் என்றால் பெண்ணல்ல
பேரழகி
போதை ஏற்றும் கண்ணழகி
கோவை இதழ் அழகி
கொஞ்சும் கிளி பேச்சஅழகி

என் நிலை நான் மறந்தேன்
காதல் போதையில்
நான் விழுந்தேன்

தேவதை அவள் என்னை
ஏற்றுக்கொண்டாள்
உயிர்களை நேசித்திட
கற்றுத்தந்தாள்

காளை நானும் வீடு வந்தேன்
என் காதலை எல்லோருக்கும்
எடுத்துரைத்தேன்

பெற்றவர் உறவினர் மறுத்துரைத்தார்
நான் கானகம் செல்வதை
தடுத்து வைத்தார்

ஆண்டுகள் சில உருண்டுடவே
புறப்பட்டேன் என்னவளை
கரம்பிடிக்க

கன்னி இல்லை கானகத்தில்
மறைந்து விட்டாளாம்
மண்ணுக்குள்.

மறக்க முடியுமா என்னவளை
அதனால்
நானும் காத்திருகின்றேன்
கானகத்தில்...
காதலி வருவாள் என்ற நம்பிக்கையில் ..!!!

எழுதியவர் : கயல்விழி (17-Nov-14, 7:26 am)
பார்வை : 205

மேலே