துகிலாத நினைவுகள்

*
துளிர்விட்ட முதல் பள்ளி பருவம்
முத்திய நிலையில் எனது முதல் காதல்
இவை இரண்டும் இருளாத உலகம்
*
முதல் பள்ளிபருவம் :
ஒன்றாம் வகுப்பில் பள்ளிக்கு செல்ல அழுதது
இரண்டாம் வகுப்பில் பேனாக்கள் தொலைத்தது
மூன்றாம் வகுப்பில் புக்கு கிழித்தது
நான்காம் வகுப்பில் நாலடியார் தெரியாமல் நின்றது
ஐந்தாம் வகுப்பில் ஐம்மது முறை தோப்புகரணம் போட்டது
ஆறாம் வகுப்பில் அரவாங்கியது பேசியதற்கு
ஏழாம் வகுப்பில் எலந்த பழம் வகுப்பறையில் உண்டது
எட்டாம் வகுப்பில் முதல் ஐந்து மதிப்பெண்
ஒன்பதாவது வகுப்பில் முதல் கவிதை போட்டி நண்பன் ஓடு
பத்தாம் வகுப்பில் போதுமான மதிப்பெண்
பதினொன்றாம் வகுப்பில் வாழ்க்கையின் முதல் பாதை
பதிரெண்டாம் வகுப்பு வாழ்கையின் வழிகாட்டல்
"இவைகள் கலையாத மேகங்கள்
தூங்காத கனவுகள்"

முத்திய முதல் காதல் :
முகம் மூடியே மூன்றாம் தெருவில்
முழு நிலவு விழுந்ததே
முகம் மூடியதால் அம்மாவாசையா
மாறி இரவு கொடுத்தது

மனதின் அலைகள் மனசை இழுக்க
இருபது வயது இலையாய்
பறக்குதே

கடிதம் எத்தனை இந்த கன்னிக்கு
கடிகாரம் பார்க்காமல் நேரம் கண்டேன்
அவள் வரும் சாலை பார்த்து

மலர்கள் பார்த்து பேசி
பசி போனது
உன்னிடம் சொல்லாமலே
என் காதல் செத்து போனது
"எத்தனை காதல் வந்தாலும் கடிதம் எழுதினாலும்
முதல் காதலும் கடிதமும் இறக்காத இறைவன்
இப்படி எத்தனை துகிலாத நினைவுகள் என்னுள் "

பன்னீர் செல்வம் ,பி.காம்(சி எஸ் ) இரண்டாம் ஆண்டு சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,வேல்றாம்பேட்,பாண்டி

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (17-Nov-14, 9:06 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
பார்வை : 111

மேலே