உயிரின் உயிரே
தொடு வானமாய்
தொலை தூரத்தில்
நான் இருக்க
தொலை பேசியல்
உன்
பாசக் குரல்
ஒலித்தாலே- என்
நெஞ்சுக்குள் வாழும்
உன் பாசம்
கண்களிலே
கண்ணீரை
ஓட்டிவிடுகிறது
உம்மா
நான் நடை பயில -உன்
முழங்காலும் கரங்களும்
பாதங்களாகி
தேய்ந்து போன
அந்த நாட்களை
நினைக்கையிலே
என் கண்ணீர்
ஆராய் பெருக்கெடுக்கிறது
உம்மா.