நதிகள் இணைய வேண்டும்
நதிகள் இணைய வேண்டும்
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.
நம் கரங்கள் இணயவேண்டும்
நதி நீர்கள் நிம்மதி அடைய வேண்டும்..
வறுமையை ஒழிக்க வேண்டும்
வளரும் சமுதாம் ஒன்று பட வேண்டும்
வாடி வதங்கும் விவசாயம் தழைக்க வேண்டும்
வாதாட நாம் தயார் ஆக வேண்டும்.
தண்ணீர் சேமிப்பு வேண்டும்
தாவரங்கள் வளர வேண்டும்
தண்ணீர் பஞ்சம் ஒழிய வேண்டும்
தாராளமாய் நாம் வாழ வேண்டும்..
நீர் வழி சாலைகள் வேண்டும்
நிழல் தரும் மரங்கள் வேண்டும்
நிஜமான வாழ்க்கை வேண்டும்
நிம்மதி பெற வேண்டும்..
விவசாயிகள் வாழ வேண்டும்
விவசாயம் பெருக வேண்டும்
விலை மதிப்புள்ள பயிர்கள் விளைய வேண்டும்
விளையும் நிலம் பெருக வேண்டும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
