காதல் கொண்டேன்-சித்ரா
என்னை விரட்டி விரட்டி
வந்த வேகத்திலும்
விரசங்கள் கொண்டேன்
--என்னை மிரட்டி அலட்டும்
அந்த ஆத்திரத்திலும்
ஆசைகள் கொண்டேன்
என் வலி பொறுக்காது
அவன் அழுதால்
ஆனந்தங்கள் கொண்டேன்
--என் உயிர் நொறுக்கும்
அந்த சிரிப்பினிலே
உரிமைகள் கொண்டேன்
ஒரு ஒப்பனை இல்லாத
அழகு முகத்தினிலே
மோகத்தைக் கொண்டேன்
--சிறு தப்புக்கள் செய்யும்
அந்த தருணத்திலே
கோபத்தைக் கொண்டேன்
பெரும்புயலின் போதும் அவன்
பனி சிந்தும்
பார்வையைக் கொண்டேன்
--வெறும் கையிலே வேந்தன்
விரல் சேர்க்கும்
தேவைகள் கொண்டேன்
பைத்தியமே என்று அவன்
பக்கத்திலே வர
பித்தத்தைக் கொண்டேன்
--நித்தமும் அவன் எண்ணங்கள்
நிறைவாய் இருக்கும்
சித்தத்தைக் கொண்டேன்
கண்கள் என்றும் அவனை
மட்டும் காணும்
மாற்றத்தைக் கொண்டேன்
--பெண்கள் யாரோ அவனைக்
கண்டால் பெரும்
சீற்றத்தைக் கொண்டேன்
அவன் மீது ஊடல்
கொள்ளும் போதும்
உவகைக் கொண்டேன்
--அவன் கால் விரல்
நகத்தின் மீதும்
காதல் கொண்டேன்