ஓர் தாயின் உள்ளம்

***தாயின் அன்பு ***

பத்து மாதங்கள்
கருவில் சுமந்தால்
மட்டும் அன்னை அல்ல ....

பெற்றவள் யாரென தெரியாமல்
குப்பை தொட்டிகளையும்
தெருவோர சாலைகளையும்
பிறப்பிடமாக வளரும் குழந்தைகளுக்கும்
தாயாகலாம் ....

ஜாதகத்தில் தோஷமாம் ....
பெண்ணவளுக்கு -மனதில்
சந்தோசத்தின் உச்சத்தில் அவள் மனம்...

கருவில் சுமந்து தாயாகும்
வரம் எனக்கில்லை ...

ஆதரவற்ற ஒரு குழந்தைக்கு
தாயாகும் வரம் எனக்கு உண்டு என்று ...

கருவில் வளர்ந்த அக்குழந்தையை
என் நெஞ்சில் சுமக்கும் பாக்கியம்
உண்டு என்று ஆனந்தம் என்னில்....

ஆம் எல்லையற்ற ஆனந்தம்
கன்னியவள் உள்ளத்தில்....

பிறவிப்பலனை உணர்ந்தால்
அவள் ...

ஆயிரம் வலிகள்
தனக்குள் இருந்தாலும் ஆதரவற்ற
குழந்தைக்கு தாயாகும் வரம்
அவள் தவமின்றி பெற்ற வரம்....

அவள் கடந்து வந்த பாதைகள்
கடினமானாலும் தன் தவபுதல்வனுக்கோ (புதல்விக்கோ )
வாழும் நாட்களை எண்ணுகையில்
அனைத்தும் மறந்தாள்...

ஊர் ஏசுமோ என்றோ ...
சொந்தபந்தம் தூற்றும் என்றோ ...
சமுதாயம் சபிக்குமோ என்றோ ....
அவள் மனம் எண்ணவில்லை ....

வாழ ஆசைபடுகிறாள் ....
.
புதிதாய் ஓர் உறவு ...
தனக்கென ஓர் சொந்தம் ...

மழலையின் கள்ளமில்லா சிரிப்பு ..

மீண்டும் மீண்டும் தொட்டுப்பார்க்க
தூண்டும் பாதங்கள்....

மென்மையான விரல்கள்....

பன்னீர் ரோஜாக்களை
இதழ்களாக கொண்ட உதடுகள்....

தன் அசைவுகளில்
என் உள்ளத்தை மொத்தமாக
கொள்ளையிட்டது ....

வாழ மறுத்த என் இதயம் ...

நொடிஒவ்வொன்றும் நீ
எனக்காக வாழ வேண்டுமடி தாயே
என்று அழுகையில் அன்பு குரல்....

அம்மா அம்மா என்று
நீ அழைக்கும் உயிரான வார்த்தைக்கு
உயிர் வாழ ஆசை என்னில்....

வரதட்சனை கொடுத்து
புரியாத வாழ்க்கையில் தன்னை
தொலைக்க விரும்பவில்லை
அவள் வாழ்க்கை ....

அன்பே....உயிரே ...
நான் தவமின்றி பெற்ற வரமே....

உன்னை கருவில் நான்
சும்மக்கவில்லை என்று
வருத்தம் கொள்ளாதே ....

திகட்டாத அன்பு ...
தரமான கல்வி....
உயர்வான வாழ்க்கை ...
உன்னதமான உறவு....

அனைத்தும் உனக்கு
உண்மையாகவும் முழுமையாகவும்
தருவேன் கண்ணே....

எனக்கு வாழ்க்கை
கொடுத்த உனக்கு -என்
வாழ்க்கையே கொடுக்கிறேன் ....

என் ஆயுள்
முழுவதும் உன்னை -என்
நெஞ்சில் சுமேப்பேன் .....

எழுதியவர் : சகி (18-Nov-14, 4:00 pm)
Tanglish : or thaayin ullam
பார்வை : 877

மேலே