அகராதி தமிழில் கவிதை
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!
அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!
அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!
அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கே இனியவன்