எப்படி என்னுள்ளம் மறக்கும்

வருடங்கள் பல கடந்து விட்டது
எப்போதும் விட அதிகமாய்
அவனை மறந்து விட சொல்லி
என் மனதிற்கு கற்று கொடுக்கிறேன்

இனம் புரியாத ஒரு சலனம்
பேசி பேசி எனக்குள் அவனை
வெறுத்துக்கொண்டிருக்கிறேன்

உடலின் இராசாயன மாற்றங்கள்
கட்டுப்பாட்டையும் மீறி
அதிகம் சுரப்பேன் என அடம் பிடிக்கிறது

ஒன்றின்பின் ஒவ்வொன்றாக
எல்லை மீறுகிறது
எனக்குள் நான்
முளைக்க அனுமதித்த அவனின்
ஞாபகங்கள் !!!!!!

வேண்டாம் விட்டு விடு
மரண விளிம்பில் நிற்பது போல்
போராடியே வெளி வர முயற்சிக்கிறேன்!!!!

இருந்தும் எப்படி மறப்பது
நாட்குறிப்பேட்டில் படிந்த
அவன் காதல் சொல்லிய
இன்றைய நாளையும் ,அவனையும் !!!!

எழுதியவர் : சுமித்ரா (18-Nov-14, 2:33 pm)
பார்வை : 101

மேலே