”நல்லுலகமைய நான் நம்பும் வழி
பசும் தளிர் சிரிக்க வெண்மழை வேண்டும்
பசும்பால் சுரக்க பசுமைகள் வேண்டும்
நால்வகை காலமும் நாள் தவறாமை வேண்டும்
செயற்கை உரம் கண்ட மண்ணும் தரமாக வேண்டும்
தரமான மண்ணும் பலமாக வேண்டும்
தூயக்காற்று பறந்தாக வேண்டும்
அதற்கு காய்கள் செழிக்க
மரம் வளர்ந்தாக வேண்டும்
பச்சிகள் பறக்க அலைக்கதிர்
நச்சுகள் இறக்க வேண்டும்
இயற்க்கையை காக்க
செயற்கை முற்பட வேண்டும்
இதை இலக்காய் கொண்டு
அறிவியல் புரிந்திட வேண்டும்
சாதிகள் அற்ற சமூகம் வேண்டும்
மதங்களுக்குள் சுமூகம் வேண்டும்
மனிதத்தை மனம் மதித்தாக வேண்டும்
மரணத்தை இயல்பாய் கொண்டாக வேண்டும்
நல்லவை நாடி சென்றாக வேண்டும்
நல்லோர் ஆட்சியில் நின்றாக வேண்டும்
உதவும் உள்ளம் உண்டாக வேண்டும்
உதறாமல் உறவுகளை கொண்டாட வேண்டும்
தான் உண்டு வாழா மனிதமும் வேண்டும்
வான் போற்றும் வள்ளல்கள் வந்தாக வேண்டும்
இருப்பது போதுமென இயல்பாக வேண்டும்
இல்லாதவன் துயர் துடைக்க இருந்தாக வேண்டும்
பண்போடு பண்பாடும் காத்தாக வேண்டும்
அன்போடு அடிபோடும் அண்ணல்கள் வேண்டும்
இவை இருப்பின் போதும்
இங்கு நல்லுலகம் காணும்