உள்ளம் என்பது கோவில்

உள்ளம் என்பது கோவில்

உள்ளம் என்பது வீடாகும்---அதில்
உன்னைத் தேடு.கோவிலாகும்.
மனது திறந்து பாடினால்—அன்பு
கனியும் ஒளியில் கூடலாம்.

இல்லை என்பதும் இருக்கின்றது.--அங்கே.
இருப்பதும் நீயே தெரிகின்றது.
இருண்ட உண்மை ஒளிர்கின்றது.—நெஞ்சம்
மருண்ட மாயை தெளிகின்றது.

கலையின் அம்சம் கோவிலது.--ஆசை
அலையும் நெஞ்சின் கூடலது.
தொலையும் பொய்மை ஆவலங்கு---தொலைந்து
தொடரும் மெய்மை தேடலங்கு.

கலையாய் உன்னை இரசித்திடத்தான்.--மெய்மை
நிலையாய் உள்ளம் வசித்திடத்தான்.
அமைதி சொல்லும் சிலைகளிலே--உந்தன்
அனுபவம் செதுக்கி படிக்கவைத்தான்.


சத்தியம் நிச்சயம் இத்தரை வாழுமானால்
சட்டமும் மன்றமும் காவலும் தேவையேது?
அறம் சொல்லும் விளக்கம்தான் ஆலயங்களோ!
புறம் வென்று அகம்ஆளும் பாடங்களோ !

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (18-Nov-14, 8:50 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
Tanglish : ullam enbathu kovil
பார்வை : 857

மேலே