இளைய சமுதாயமே
வாழ்வே முடியும் போது
வாழ வந்த
நம்மால் முடியாதா
வாழ்வை வெல்ல....
நேர்மறை எண்ணங்களில்
எழுந்து நில்..
எதிர்மறை எண்ணங்களை
எதிர்த்து நில்...
முடியாது என்பவன்
அறிவிலி..
முடியாததை முயன்று
வெல்பவன்
அறிவின் ஒளி..
வெல்ல முடியும் எல்லோராலும்
முயற்சியின் கயிற்றை
இறுக்கப் பற்றிக்கொண்டால்...
அன்னையும் , தந்தையும்
முன்னெறி தெய்வம் ..
அவர்களை மதித்தால் நாம்
வாழ்வில் முன்னேறி
வாழ்வை முன்னேற்றி செல்வோம்...
வெறும்
வாய் பேசிக்கொண்டே இருந்தால்
வருவாய் நம்
வாசல் வந்து சேராது...
வழிகளில் வரும்
வலிகளை சந்திப்போம் -அவ்
வலிகளை வலிமை இழக்கச் செய்யும்
வழிகளை சிந்திப்போம் ..
பிறரின் உழைப்பால் விளைந்த
பொருட்களை திருடுவதை விட பாவம்
பிறரின் உழைப்பை திருடுவது...
அத்தகைய திருடர் கூட்டம்
அறவே ஒழிப்போம்!
இளைய சமுதாயமே!
துணிவோடு நீ எழுந்திடு !
முயற்சி எனும்
எழுதுகோலை எடுத்திடு !
வெற்றி சரித்திரத்தில்
உன் பெயரை நீ எழுதிடு .....