இல்லாது போவாய் !
சர்க்கரையும் இரத்தழுத்தம்
சாவுக்கான இரு பாதை
சத்தமில்லா உழைப்பிருந்தால்
சந்திக்கலாம் ஒரு பாதை
வியர்வையிங்கே வழிகாட்டி
விதியங்கே நீண்ட ஆயுள்
வீட்டோடு நாடு மட்டும்
விவரிக்க ஒரு பாதை
பயணங்கள் முடிவடையா
படித்ததும் கையளவு
வாழ்வதும் சாவளவு
வரவேற்கவே வயதளவு
உணர்வாயா விதியென்று
உடலோடும் உயிரெண்டு
மதித்துவிட்டால் உடலுழைப்பென்று
மரணம் தள்ளி வருவதுண்டு