என் பிணத்தின் மீதே துப்புங்கள் - தமிழன் பரிதி வருங்கால உழவன்

அன்னைத்தமிழை நிதமும் ஓதி,
சிந்தைக்கு உணவாய் செந்தமிழ் உண்டு,
செம்புலப்பெயல் நீர் சேர்ந்ததைப் போலே...
ஐம்புலனடக்கித் தமிழொடு சேர்த்து,
ஐம்புலனடங்கப்பெற்றான் எனினும்...
வையம் போற்ற வாழவுமில்லை,
காந்தியின் நகையைத் தாங்கிய குப்பையைக்
கழுத்துவரையிலும் சேர்க்கவுமில்லை,
தமிழைப்படித்தே வேளாண் பிடித்தான்,
தருக்கன் அதனால் தழைக்கவுமில்லை,
வாழ்க்கையும் அதனால் செழிக்கவுமில்லை.
"என்றொரு நிலையில் என் பிணம் கிடந்தால்..."
சாலையில் எங்கும் துப்பிவிடாதீர்,
உள்ளுக்குள்ளும் விழுங்கிவிடாதீர்,
உமிழ்நீரோடே வாருங்கள்
என் பிணத்தின் மீதே துப்புங்கள்.

எழுதியவர் : தமிழன் பரிதி வருங்கால உழவ (19-Nov-14, 6:58 pm)
பார்வை : 72

மேலே