தமிழும்,தலைவனும் இவனே - தமிழன் பரிதி வருங்கால உழவன்

தமிழும்,தலைவனும் இவனே! - தமிழன் பரிதி வருங்கால உழவன்

முப்பாலும் என்றன் தாய்ப்பாலுக்குச் சமம்-அதைத்
தப்பாக்கிச் சொல்பவன் என் கால்மயிருக்குச் சமம்!

எக்காலும் தமிழனுக்கில்லை ஒப்பானவன் இங்கே...
எதிரியும் எங்கள் பெருமை உணர்ந்தால்
எடுத்து ஊதுவான் தமிழ்ச்சங்கே!

கடாரம் வென்று கொடியேற்றியதும் எம்மினமே...
ஈழம் வெல்ல புலியாய்ப் பாய்வதும் எம்மினமே!

எதுகை மோனை வார்த்தைகளாலே பெருமைமட்டும் சொல்பவரல்ல,
எதிரையைக் கிழிக்கும் அறிவை இங்கு ஆயுதமாகக் கொண்டவர் நாங்கள்!

பாட்டன் அவனின் வீரம் அதனை நூல்கள் வழியே நாங்கள் படித்தோம்...
செய்முறை விளக்கம் அதனை எங்கள் பிரபாகரனின் படையில் படைத்தோம்!

வீட்டுக்கொன்றாய் விதையைக்கேட்டு நாட்டுக்காக நட்டதும் இவனே...
அதற்கு நீராய்த்தனது பெண்டு பிள்ளைகளின் உதிரம் ஊற்றி வளர்த்ததும் இவனே!

இவனைப் பெற்றதால் ஈழம் சிறந்தது...
இவனைப் படித்தே என் சிந்தை சிறக்குது!

எழுதியவர் : தமிழன் பரிதி வருங்கால உழவ (19-Nov-14, 6:40 pm)
பார்வை : 80

மேலே