எனது கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறேன் 13
தாமரை 1
பொழிலின்
எழில்
கதிரவன்
கை தொட
சிவக்கும் பெண்
========================================================================
மல்லிகை 2
கரிய கூந்தலின்
வெள்ளைக்
கவிதை .
========================================================================
செண்பகம் 3
மஞ்சள் அழகி
ஒருத்தியாய் வந்தால்
நின்ற இடம் மணக்கும்
தோழிகளுடன் வந்தால்
ஊரே மணக்கும்
========================================================================
மலர் 4
இயற்கை
இறைவன்
வரைந்த
ஓவியம்
மலர்
இயற்கையின்
சிரிப்பு
========================================================================
மலரின் மௌனம் 5
மலரின் மௌனம்
சோகம் இல்லை
காதலின்
ராகம்
========================================================================
செவ்வாய் 6
செவ்வாய்
சிகப்பு
கிரகம்
உயிர் தத்துவம்
சாத்தியம்
என்கிறது
விஞ்ஞானம்
மற்ற ஜீவராசிகளை
அனுப்புங்கள்
மனிதன் வேண்டாம்
மேலும்
சிகப்பாகிவிடும்
========================================================================
சங்கு 7
சங்கு
மலர் என்பார்
பக்தர்
சங்கு
கழுத்து என்பார்
புலவர்
சங்கு
வலம்புரி என்பார்
மூழ்கி எடுத்தவர்
சங்கே
முழங்கு என்பான்
ஆசான் பாரதி தாசன்
சங்கை
முழக்கி நின்றான்
கீதையின் கண்ணன்
சங்கு
அதிகாலையில்
ஆண்டவனை
துயில் எழுப்பும்
இறந்துவிட்டால்
இறுதி ஊர்வலத்தில்
இரட்டையாய்
ஒலிக்கும்
சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் சங்கு
உடல் சுட்டு விட்டாலும்
ஆத்மா ஒளி பெரும் என்று
அறம் உரைக்கும் சங்கு
========================================================================
மனக் கதவை திறந்து 8
இமைக் கதவை
திறந்து
என்னை வரவேற்றாள்
இதழ் கதவை
திறந்து
மலர் கொடுத்தாள்
மனக் கதவை
தட்டினேன்
மெல்லத் திறந்தாள்
மௌனமாய்
உள்ளே எடுத்துச் சென்றாள்
ஓர் புதிய உலகம் காட்டினாள்
அதன் பெயர் காதல் என்றாள்
========================================================================
அந்தி நிலவொளியில் 9
சிந்து நதிவெளியில்
நாகரீகம் வளர்ந்தது
சரித்திரம்
அந்தி நிலவொளியில்
காதல் வளர்வது
இலக்கியம்
சிந்தனை பெருவெளியில்
சிந்திய காதல் முத்துக்களே
கவிஞன் எழுதிய புத்தகம்
========================================================================
ஒரு பித்தனைப் போல் 10
சிந்தனை முத்துக்களை
உன் செவிதழ் ஓரத்தில்
இழந்து விட்டேன்
சித்திர விழிகளில் நான்
புத்த்தகம் தொடுவதை
மறந்து விட்டேன்
நித்திரை கலைத்து என்னை
நித்தமும் வாட்டுகிறாய்
சத்தியம் இது தோழி
ஒரு பித்தனை போல் ஆகிவிட்டேன்
========================================================================
-----கவின் சாரலன்