குழந்தை பேசியது புரியவில்லை

குழந்தை பேசியது புரியவில்லை!!!

உன் பேச்சும் புரியவில்லை
உன் ஜாடையும் புரியவில்லை
உன் அழுகையும் புரியவில்லை
உன் சிரிப்பும் புரியவில்லை
உன் மழலையின் செய்கைகள்
எதுவும் புரியவில்லை
உன் தாய்க்காவது புரிகிறதா?..
உன் தேவைகள் என்னவென்று
அதுவும் எனக்கு புரியவில்லை..
என்ன பார்க்கிறாய்
அதுவும் புரியவில்லை....

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Nov-14, 12:00 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 46

மேலே