மாற்றத்தை நீயே நிகழ்த்தி விடு- சித்ரா

முத்ததிற்காக போராடும் மூடர்களைப் பார்த்தேன் -அதை
--வித்திட்டவனை வேரோடு அழிப்பதில் தோற்றேன்
எல்லா பொருட்களையும் ஏற்றுமதியில் பார்த்தேன் - நமக்கு
--இல்லாமல் போய்விடுமே என்றெண்ணி வியர்த்தேன்
வாங்கிய பதக்கங்கள் வீணாய்ப்போக பார்த்தேன் - வெற்றியை
--வாங்கும் வியாபாரம் ஏனோவென்று துடித்தேன்
பதுக்கிய செல்வங்களை பைய்யில்கட்ட பார்த்தேன் - ஏழைக்கு
--ஒதுக்க எண்ணமில்லையோ என்றுகேட்க நினைத்தேன்
இந்திய பொருட்களை வாங்கவே பார்த்தேன் - அந்நியன்
--சிந்தியமிச்சத்தைத் தாங்கியே கண்ணீரும் வடித்தேன்
தரமான உணவெல்லாம் தரையில்போக பார்த்தேன் - அழகாய்
--உரமிட்டவனக்கு உணவில்லைஎன்றெண்ணி உடைந்தேன்
மாறவே வேண்டுமென்று பலகவிகள் படைத்தேன்- வார்த்தையில்
--கூறவே முடியாதென்று என்காகித்தைக் கிழித்தேன்
அத்தனை அநீதியும் மாற்றவேதான் நினைத்தேன் - அது
--சாத்தியமே இல்லையென்ற சத்தியத்தை அறிந்தேன்
சின்ன செயலை என்னிலிருந்து தொடர்ந்தேன் - கற்பனை
--மின்ன கனா பளிக்காதென்று உணர்ந்தேன்
துறை ஒவ்வொன்றிலும் தனி மனிதனே - அனைவரும்
--முறையாக நடக்க மாற்றம் நிகழுமே
வேண்டி கேட்டது போதும் மாற்றத்தை - முதலில்
--தோண்டியெடு உன் தீய தோற்றத்தை
தோளும் நீயே உயர்த்தி விடு
வாளும் அதனை நீயே தொடு(வீசு)
வெற்றி நிச்சயம்
மாற்றம் சத்தியம்..