அம்மாவின் நினைவுக்காக

காரியங்கள்
முடிந்து விட்டன !

வீடு
வெறிச்சோடியிருக்கிறது !

அம்மாவின்
புகைப்படத்துக்கு
மாலை போட்டு
விளக்கேற்றியிருப்பதை
நம்ப முடியவில்லை !

நண்பர்களோடு
பேசிக்கொண்டு
அப்பா
மெல்ல மெல்ல
மீண்டு வருவது
ஆறுதல் தருகிறது !

வயிற்றில்
சுரந்த அமிலம்
பசியை உணர்த்த,
சாப்பிட வா
என்றழைத்த
ஓர் உறவினரின் குரல்
அம்மாவின் குரல்
போலவே
தோன்றிய
அந்தக் கணத்தில்
வெடித்துக் கொண்டு
வருகிறது
அழுகை !

எழுதியவர் : குருச்சந்திரன் (20-Nov-14, 4:40 pm)
பார்வை : 318

மேலே