கல்லானவன்

கடவுள் இருக்கிறானா?
கண்டவர்கள் சொல்லுங்களேன்....
கல்லிலும் இருப்பான்
என்றீர்...
கல்லாகவே இருப்பானோ...?
இரக்கமற்ற இறைவனவன்
இருந்தாலென்ன...
இறந்தாலென்ன
தூணில் இருந்தாலென்ன
துரும்பில் இருந்தாலென்ன.....
கோடிகளில் திருடும்
கேடிகள் வாழும் போது....
பெண்பித்து தலைக்கேறும்
பேடி சாமியார்கள் வாழும்போது...
கொலை களவு புரியும்
கயவர்கள் வாழும் போது....
நான் அணுவாய் ரசித்து
தாய்மையை சுவைத்து
பூவை கையிலேந்தும்
பொன்னான நாளுக்கு ஏங்க...
என் தங்க மகள் வாழ
இத் தரணியிலே
இடமில்லையோ?
மண்ணுலகம் காணாமலே
என் மடி மீது தவழாமலே
என் மார் மீது துயிலாமலே
கரு கொண்டு உயிர் கொண்ட
ஐந்தாம் மாதத்திலே
என்னழகு குழந்தையை
இரக்கமின்றி பறித்தானே....
பிள்ளையாய் காணாமல்
பிண்டமாய் கண்டேனே....
எத்தனை சாபமோ
ஏழு ஜென்ம பாவமோ?்
எரிக்கும் சக்தி எனக்கிருந்தால்
உனை வெந்தணலில்
வீழ்த்திடுவேன்...
என் தாய்மை பறித்த
நீ க(ல்)ள்வன்
இறைவா உனை சபிக்கின்றேன்
நீ மண்ணுலகம் காண வேண்டும்
மனிதனாய் அவதரித்து
மழலை வரம் வேண்டி
மன்றாடி அலைய வேண்டும்
வரம் வாங்கி தவம் வாங்கி
நீ பெறும் பிள்ளை
பாதியிலே.......