தம்பிக்குஒருபாட்டு
பல்லவி
--------------
நாளை நீயுமொரு தலைவனடா தம்பி -இந்த
நாடு காத்து நிற்குதடா உன்னையே நம்பி
சரணம்
--------------
கல்வியை பழுதற நீ கற்று -நெஞ்சைக்
கவ்விடும் மடமைகள் நீ விட்டு
அறிவொழி மின்னும் வல்லவனாக
அகவிருள் இல்லா நல்லவனாக
வாழ்ந்தால் போதும் தம்பி .............[நாளை
அன்னையை தந்தையை நீ துதித்து -நல்ல
ஆன்றோர் தமையே நீ மதித்து
இறைவனை வணங்கி பக்தியுடன்
எவரும் போற்றும் புத்தியுடன்
வாழ்ந்தால் போதும் தம்பி .... [. நாளை ]
அன்பும் அறமும் நீ வளர்த்து -நாளும்
அகந்தை ஆணவம் நீ அழித்து
இன்சொல் பேசி செழித்த முகமாய்
எவரும் கவரும் சிரித்த முகமாய்
வாழ்ந்தால் போதும் தம்பி ....... [நாளை ]
********* ************ *********