தோழா என் தோழா

தோழா... என் தோழா ...
நீ ஏணிப்படி... வெற்றியை எட்டிபிடி ...

வெற்றியை தேடி ஓடும் போது
வெற்றிடம் பற்றும் காற்றாய் மாறு...
வேங்கை பாயும் வேகத்தை போல
வெண்ணிலா ஏறும் துணிச்சல் தேடு...

தோழா... என் தோழா ...
நீ ஏணிப்படி... வெற்றியை எட்டிபிடி ...

வார்த்தைக்கும் வறுமை என்றால்
வாழ்க்கையும் கூட வர மறுக்கும்
உணர்வுகளை புதைக்கும் போது
வியர்வையில் கூட பயமிருக்கும்...

எடுத்து எறிந்த பூக்களும்
வீதியிலே பூத்து கிடக்கும்
துணிச்சலின் நிழல் துணையிருந்தால்
தூவானம் துறத்தி போகும் தூரம் மறந்திருக்கும்...

வேகம் கொண்டு ஓடும் போதும்
சுற்றம் நட்பும் தேவை தேவை ...
சோகம் உன்னை நெருங்கும் போது
அக்கம் பக்கம் கவனம் தேவை...

விடியும் திசை தெரிந்தே எழுந்தோம்
பயணம் மட்டுமே... எதிர்திசையில் ....

தோழா... என் தோழா ...
நீ ஏணிப்படி... வெற்றியை எட்டிபிடி ...

எழுதியவர் : மலர்மொழி (20-Nov-14, 4:51 pm)
பார்வை : 90

மேலே