காதல் வந்தால் - நாகூர் கவி

இரும்பான
மனங்களை
துரும்பாக்கி விடும்...

கரும்பான
மணம் கொண்டு
இனிப்பாக்கி விடும்...

தேவதையின்
தேடலிலே
எப்பொழுதும் மூழ்குவாய்...

காதல்
கவிதைகளிலே
எந்நேரமும் வாழுவாய்...

உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...

அவளது
திருவுருவம்தான்
ததிங்கரத்ததா போடும்....

அதிலும் குறிப்பாக
உன்னை
வளைத்ததற்கு சாட்சியாய்...

அவளது
இருபுருவம்தான்
தகதிமிதா போட்டு ஆடும்...

நேரம்
தவறியோ வந்தால்
நீ நினைவை இழப்பாய்...

வாரம்
ஒருமுறையோ வந்தால்
காதல் வரத்தை கேட்பாய்....

அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...

நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்....

காதல் வந்தால் ஆனந்தமே
அந்த கசமுசா கனவுகளும்
இனி ஆரம்பமே...!

எழுதியவர் : நாகூர் கவி (21-Nov-14, 12:38 am)
பார்வை : 605

மேலே