நாடோடிக் காற்று
நாடோடிக் காற்று - வாசிப்போர் வாசிக்கலாம்
========================================
பண்டு ஒருநாள் என் கவிக்கடலலைக்
காணணும் என்று
வாசிப்பிடித்து சொன்னபோது
கைப்பிடித்து கூட்டிக்கொண்டுபோய்
காண்பித்திருந்தேன்
பழுப்பு வண்ணம் அப்பிய
மற்றொரு நிறமாதிரி இல்லாத
என் மார்புச்சுவர்க்கட்டியிருக்கும்
கரப்பாலத்து பின் புறத்தில் நின்றுதான்
அவள் கண்டதும் இரசித்ததும்
பின்னே அச்சுவர்க்கீரிக் கடந்து
ஒருபாடு லோகம் கண்டு முட்டியாயிற்று,,
தனித்திருக்கும் இம் மனசு
அவள் அதைக் காணாது போனதோ
இல்லை அறியாமல் போனதோ தெரியவில்லை
அவள் வளர்ந்துவிட்டிருந்தாள்
என் விழி எட்டா தூரம்வரை வளர்ந்துவிட்டிருந்தாள்
நான் ஆக்கிரகித்ததைத் தாண்டியும்
வளர்ந்திருந்தாள்
என்னை விழுங்கியும் வளர்ந்திருந்தாள்
நான் அறிந்திருக்கவில்லை
அவள் புரியாமல் போகும் என் அக்கறைகளும்
கூட கூட வளர்ந்துகொண்டே
வருகிறது என்பதை
என்னிலிருந்து அலசி அவள் புறமெடுத்த
யாருமற்ற என் மழலைப்பிரபஞ்சம்
சிறிதாகி சிறிதாகி
மீண்டும் நானும் என் தனிமையும்
பழையபடி தனித்துவிடப்பட்டிருந்தோம்,,,,
பரவாயில்லை
ஒர்க்காத நேரத்து
அடைமழைப்பொய்த போது
அற்பம் நனைந்துவிட்டிருந்ததைப் போலே
என்னோடான அனுபவங்களை
அவள் எடுத்துக்கொண்டு போனாள்
எனக்கருதிவிடுகிறேனே,,,
ஒரே மேற்க்கூரைக்குக் கீழே
அவளுக்கு ராணியுடைய வேஷமும்
எனக்கு விருந்தாளி வேஷமுமென
இனி தொடராமல் முடிவுரட்டும்
எனக்கும் அவளுக்குமான இப்பயணம்,,,,
நிலைமாறி கிளைமாறி
சென்றுக்கொண்டிருக்கும்
இக்கதா பாத்திரங்களில் இருந்து
பரஸ்பரம் மாறவோ
இல்லை பிடித்து மாற்றவோ
இனி நம்மில் யார் நினைந்தாலும் முடியாத ஒன்று
பந்தங்களுடைய காட்சிகளை
கண்டுக்கொண்டுதானே வளர்ந்ததும் வந்ததும்
அகம் வைத்து தைத்துவிட்டவை யாவும்
அகலவும் அகலாது
விட்டெங்கும் போகவும் போகாது
விளித்தால் அவ்விளிதாண்டி
ஒருபோதும் உறங்காத
கள்ளப்பூட்டிட்டு முடக்கிய நாடகமனசுமாகி
எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கும்
இதுகாறும்
மனசினுள் குழைகொண்ட
எந்த ஒன்றிற்கும்
உடமைக்காரனாகி யிருக்கவில்லை
காவல் காத்ததைத் தவிர்த்து,,,,
பலப்பொழுதும்
வாழ்க்கை இப்படித்தான்
வைகிக் கிட்டிய கடுதாசியைப் போலே
வெறும் ஒர்மைகளே சுகம்
அனுசரன்