தினம் பூத்து உதிர்கிறேன்

நெடுஞ்சாலையோர அரளிச் செடி நான்
உனக்காக அழகானேன்
நம் காதலை பாக்களாய் சுமந்தபடி !

காற்றில் அசையும் போதெல்லாம்
உதிர்க்கிறேன் மகரந்தமாய்
என் மனதை

ஒன்றாவது தொட்டுவிடாத உன்
மனமெனும் சூழ் முடியை
என்ற எண்ணத்தோடு !

ஏனோ தெரியவில்லை
காதலைப் பொருத்தவரை
பூபெய்தாமலே நீ !

தினம் பூத்து உதிர்கிறேன் நான்

எழுதியவர் : முகில் (21-Nov-14, 8:09 am)
பார்வை : 453

மேலே