எதிர்காலம் என்னுடனே நீ இருக்க வேண்டும் கண்ணே
போன இடம் காணவில்லை
பூங்குழலி உன்னை போன்று
கன்றை கூட காதல் செய்யும்
அன்பு உள்ளம் உனக்கு தானே
எதிர்பார்ப்பு எதும் இல்லா
உன் அன்புக்காக ஏங்குகிறேன்
கள்ளம் இல்லா சிரிப்புக்காக
காலமெல்லாம் தவம் இருப்பேன்
வெகுளியாக நீ இருக்க
வெள்ளை உள்ளத்துடன் நானும் இங்கு
எதிர்காலம் என்னுடனே
நீ இருக்க வேண்டும் கண்ணே
வஞ்சம் இல்லா நெஞ்சினிலே
முகம் புதைக்க தோன்றுவதேனோ
பஞ்சு மேனி கொண்டவளே
நெஞ்சினிலே மிதக்கின்றாலே
பாவடை தாவணியும்
புடைவையாக மாறும்போது
கட்டி தங்கம் உன்னை
களவாடி போவேனோ.......