வண்ணம் பூசா உதடுகள் காண

பூ என்று எண்ணியே ..
தேன் பருக ,
வந்ததோர் தேனி ..
தன்னில் காண ..
வண்ணம் கண்டே ,
வந்ததோர் வண்ணத்துபூச்சி ..
குழலிசையினும் மென்மை ..
ஒன்றை கண்டே ,
வந்ததோர் காற்று ..
தாலாட்டினும் இனிமை ..
உண்டு என்றே ,
வந்ததோர் ராகம் ..
பார்த்தாலே பசிதீரும் ..
மாமிசம் என்றே ,
வந்ததோர் மிருகம் ..
அணு பிளவும் இணைவும் ..
இங்கு கண்டே ,
வந்ததோர் விஞ்ஞானம் ..
அத்தனையும் வந்தனவோ ???
என்னவளின் ..
வண்ணம் பூசா ,
உதடுகள் காண ..!!!!!!!