நீலக்குயில் தேசம்3---ப்ரியா

தோழிகள் மூவரும் கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானார்கள் அம்மாவின் விருப்பப்படி பேருந்தில் பயணமானார்கள்.

இங்கிருந்து கல்லூரிக்கு செல்ல 2மணிநேர பயணம் தேவைப்பட்டது.எப்படி பயணத்தை தினமும் சகிப்பது என்று அலுட்டிக்கொண்டாள் அஜிதா போகப்போக எல்லாம் பழகிடும் என்று ஆதரவு வார்த்தை கூறினாள் கயல்.

முதல் நாள் கல்லூரிக்கு செல்கிறோம் என்ற எந்த தடுமாற்றமும் இல்லை ஏனென்றால் மூவரும் ஒரே வகுப்புதான் பள்ளிக்கு செல்லும்போது எப்படியோ அதே உணர்வில்தான் இன்றும்.......

இந்த பஸ் பயணம் மட்டும்தான் அவர்களுக்கு கொஞ்சம் போராக இருந்தது.பஸ்ஸின் இருக்கையின் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கைப்பார்த்தும் இயற்கையை ரசித்தும் சென்றதால் அன்றைய பயணம் இனிதாய் அமைந்தது.

பயணத்தை முடித்து கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைத்தனர்.

கல்லூரியின் முகப்பே மிகவும் பிரமாண்டமாக இருந்தது....எழில் மிகு பூங்காவும் அழகாய் ரசிக்கும் வண்ணம் அமைந்திருந்தது. பார்ப்பதற்கும் அழகு மட்டுமல்ல படிப்பிலும் கெட்டியான மாணவர்களை உருவாக்கும் கல்லூரி என்றே பெயர் பெற்றிருந்தது.

கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரியைப்பற்றி நன்கு விசாரித்து தெரிந்து கொண்டுதான் இங்கு படிக்க வந்தனர்.

"WINS CHRISTIAN COLLEGE OF ARTS AND SCIENCE " சுற்றியிருக்கும் இரண்டு மூன்று மாவட்டங்களிலேயே மிகவும் பிரபலமான கல்லூரி என்றே சொல்லலாம் அவ்வளவு பெயர் பெற்று விளங்கியது அந்த கல்லூரி.

நல்ல படிப்போடு நல்ல வாழ்க்கையையும் அளிக்கும் பாதையாய் திகழ்ந்தது இந்தக்கல்லூரி.

பி.எஸ்.சி.மைக்ரோபையாலஜி பாடப்பிரிவை தேர்வு செய்திருந்தனர் அதுதான் மூன்றுபேரின் இஷ்ட பாடமுமாக இருந்தது. எந்த அளவுக்கு இந்த பாடத்தை பிடித்திருந்ததோ அந்த அளவுக்கு அவர்கள் பள்ளி மைக்ரோபையாலஜி ஆசிரியரையும் பிடித்திருந்தது.அவர் பாடத்தோடு சேர்த்து நிறைய அறிவுரைகளையும் கற்றுதந்தவர்......!

கல்லூரியினுள்ளே சென்றனர் அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் அழகாய் பளிங்காய் மின்னிக்கொண்டிருந்தது. பார்க்குமுகமனைத்தும் தெரியாத முகங்கள் இப்பொழுதுதான் இவர்களுக்குள் ஒரு சின்ன பயம் தொற்றிக்கொண்டது இது புது இடம் என்பதையும் இப்பொழுதுதான் ஏதோ ஒன்று உணர்த்திக்கொண்டிருந்தது....!

ஷீபா மூன்று பேர்லயும் மிகவும் தைரியசாலியாக இருந்தாள் தன் தோழிகளின் நிலைமை புரிய அவர்களது பயத்தைப்போக்க அவர்கள் மனதை வேறுபக்கம் திசை திருப்பினாள்.........

"என்னடி இன்னிக்கு உன் கனவுல அந்த அழகிய கனவு தேசம் வந்ததா?" என்றாள்.

சிரித்துக்கொண்டே ஆமாடி எப்டி கண்டுபுடிச்சா என்றாள் கயல்.

சொல்லுடி என்ன நடந்தது இன்னிக்காவது உன் ஹீரோவைப்பார்த்தியா?என்றாள் அஜி.....

பார்க்கலன்னா தயவு செய்து அந்த கனவை சொல்லாதடி என்று அவளை கிண்டலடித்தனர் இருவரும்.

என் ஆளைப்பார்த்தேன்டி என்றாள் கயல்.

அப்படியா?என்று இருவரும் வாய் பிளந்தனர்.

ஆமாடி முகத்தை தவிர பார்த்தேன் என்று ஏமாற்றினாள்.

ஏமாற்றத்துடன் அவர்கள் இவளை முறைத்தனர்.

எப்படியாவது விரைவில் அவனை கண்டுபிடித்துவிடுவேன் என்று சவாலிட்டாள்.

பார்ப்போம் என்று தோழிகள் கிண்டலடித்தனர்.....!

அதற்குள் அவர்கள் வகுப்பு வந்தது உள்ளே சென்றனர் மொத்தம் 53மாணவர்கள் முதல் நாள் என்பதால் அனைவருமே அமைதியாக உட்கார்ந்திருந்தனர்......!

அப்பொழுதுதான் அவர்கள் வகுப்பிற்கு அருகில் வந்தான் அவன்......

அவனைப்பார்த்ததும் கயல் தன் தோழிகளிடம் ஏய் இங்கப்பாருங்கடி இவன் எப்டி இங்க............

யாரென்று கேட்டுக்கொண்டே கயலின் பார்வை பட்ட இடத்தை தோழிகளும் நோக்கினர்....





தொடரும்..........!

எழுதியவர் : ப்ரியா (22-Nov-14, 4:27 pm)
பார்வை : 360

மேலே