காதல் கருவாய் உருவாகுது - இராஜ்குமார்

காதல் கருவாய் உருவாகுது
=========================

நொடிகள் குறையாமல் கண்கள் காத்திருக்க
கண்ணீர் துளி துளியாய் வெளியேறுது
பாதைகள் மாறாமல் கால்கள் சேர்ந்திருக்க
பாதம் வழி வழியாய் பயணம்போகுது

சிந்தனை சிதறாமல் அறிவு நிலைத்திருக்க
நினைவு தனி தனியாய் தொலையுது
பக்குவம் சேராமல் மனம் நின்றிருக்க
சினம் வித விதமாய் சிரிக்குது

அன்பு புதையாமல் மனிதம் மலர்ந்திருக்க
காதல் கரு கருவாய் உருவாகுது
உணர்வு மதியாமல் பாசம் பிரிந்திருக்க
கவலை தெரு தெருவாய் அலையுது

காற்று வீசாமல் வாசம் வந்திருக்க
மலர் இதழ் இதழாய் வாடுது
காதல் வாராமல் இதயம் தனித்திருக்க
உயிர் கவி கவியாய் எழுதுது

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Nov-14, 9:54 pm)
பார்வை : 270

மேலே