லை ஓர் உணர்வு

நம் கலாச்சாரத்தில் காலச்சிறந்தது.
சீலைக்கொண்டு உடல் தரிக்கையில்
ஒருப்பெண் பிறக்கிறாள்.
உடலை விழுங்காமலும்
உணர்வை வழியாமலும்
காண்போர்க் கண் கனக்க
ஒரு புடவை பெண்ணாகிறது.
இலைமறைப்பாய் திரைமறைக்கிறாய்
இலையுதிர் காலம் எப்போதென ஏங்குகிறது
இவன் நெஞ்சம்.
அரும்பாய் குறும்பாய் இருந்தாள்
சீலை உடுத்தியப்பின் கரும்பாய் எறும்பாய் இருந்தாள்.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க இயலாது
சீலையுடுத்திய பெண்ணின் அழகையும் எதனாலும்
திரையிட முடியாது.
சீலைக்கொண்டு ஆளை மூடுகிறாய்
மனதிற்குள் எலி அம்மணமாய் ஓடுகிறது.
பெரும்பாலான பெண்களுக்கு முதற்சீலை
அம்மாவுடையது என்பதாலோ
அத்தனை சேட்டைகளையும் சீலை
விழுங்கிவிடுகினது.
அதென்னவோ அச்சம், மடம், நாணத்திற்கெல்லாம்
சீலைதான் பிறப்பிடம் போல...

எழுதியவர் : ராமசந்திரன் j (23-Nov-14, 1:11 am)
சேர்த்தது : ramj
பார்வை : 57

மேலே