கவிதை சொன்னதும்
கவிதை சொன்னதும் பொய்யே! பொய்யே !
கவிதை சொன்னது
என்னை உவமையோடு சேர்க்காதே என்று
உவமை சொன்னது
என்னை கற்பனையோடு பார்க்காதே என்று
கற்பனை சொன்னது
என்னையே எப்போதும் எண்ணாதே என்று...
எண்ணங்கள் சொன்னது
என்னை எப்போதும் ஞாபகப் படுத்தாதே என்று
ஞாபகங்கள் சொன்னது
நீ என்னை உயிர் உள்ளவரை
மறக்காதே என்று ...