தாயே தமிழ்த்தாயே
தாயே தமிழ்த் தாயே
உன்னை வாழவைக்கத்தான்
எத்தனைபேர் பாடுபடுகிறார்கள்
நீ என்ன இறந்தாகொண்டிருக்கிறாய்?
நீ என்றுமே இறக்கப்போவதில்லை
இதை இறக்கபோகின்றவர்களால்
எப்படி அறியமுடியும்.
நீ இறப்பதுமில்லை
யாரிடமும் எதையும்
இரக்கபோவதுமில்லை.
பாவம் பிழைக்க
வழி தெரியாதவர்கள்தான்
உன்னை வாழவைக்க நினைக்கிறார்கள்.
எட்டு திக்கிலும் உள்ளவர்கள்
எதிர்த்து வந்து தடுத்தாலும்
ஒட்டுமொத்த உலகமுமே
திரண்டுவந்து எதிர்த்தாலும்
கெட்டும் மதிகெட்டு கேடுகெட்டோர்
உன்னையும் அழிக்க நினைத்தாலும்
தொட்டுத் தொடர்ந்து வரும்
தமிழ்த்தாயே உன்வாழ்வு
என்றும் அழியாது
அது இறைவனுக்கு நிகராகும்.