தங்கம் மகளே
தங்கம் (மகளே)!!!
உன் பெயரை சொல்லவே
தயங்கியது என் நெஞ்சம்
உன்னை தொட்டு பார்க்கவே
எனக்குள் ஒரு அச்சம்
உன் விலையை கேட்கவே
நடுங்குகிறது என் இதயம்
உன்னை அணிந்து கொள்ளவே
யோசிக்கிறது என் உள்ளம்
உன்னை அணிந்தது கொண்டு
வெளியே போகவே எனக்குள் ஒரு பயம்
ஏன் மகளே நீ இப்படி
ஒரு உயரத்தில் யோசித்து பார் கொஞ்சம்.
நீ பெட்ரோல்லுடனும் டீசலுடனும்
நெருங்காதே கொஞ்சம்....